சூரப்பா மகளுக்கு அண்ணா பல்கலையில் பணியா? விசாரிக்க தனிக்குழு அமைப்பு!

 
சூரப்பா மகளுக்கு அண்ணா பல்கலையில் பணியா? விசாரிக்க தனிக்குழு அமைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மகள் அண்ணா பல்கலையில் முக்கிய பணியில் இருப்பதாகவும் சூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மகளுக்கு அந்த பணியை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது 

ஆனால் இது குறித்து விளக்கமளித்த சூரப்பா ’எனது மகள் சம்பளம் பெறாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பணியாளராகத்தான் சேவையாற்றி வருகிறார் என்று கூறினார். மேலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் இதற்காக நான் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் 

மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க

soorappa

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரின் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது

கடந்த சில நாட்களாக இறுதி தேர்வு மாணவர்களுக்கு தேர்ச்சி கொடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் சூரப்பாவிற்கும் பனிப்போர் இருந்த நிலையில் தற்போது திடீரென சூரப்பா மீது குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தபோது சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது

From around the web