ஏஐசிடிஇ எழுதிய கடிதத்தை வெளியிட்ட சூரப்பா: தமிழக அரசுக்கு சிக்கலா?

அரியர்ஸ் மாணவர்கள் ஆல்பாஸ் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அறிவிப்புக்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்து இமெயில் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவர்கள் சமீபத்தில் தெரிவித்து இருந்தார் 

ஆனால் சூரப்பாவின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் சூரப்பா தனது சொந்த கருத்தை ஏஐசிடிஇ தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து பதிலளித்த சூரப்பா ’ஏஐடியூசில் இருந்து கடிதம் வந்தது உண்மை என்றும் அந்த கடிதம் தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் கூறியது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார் 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதத்தை சூரப்பா அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா வெளியிட்டுள்ளார். அரியர் தேர்வு ரத்தை ஏற்கமுடியாது என ஏஐசிடிஇ எழுதிய கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வெளியிட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

From around the web