ஆதரவற்ற குழந்தைகள் பசியுடன் இருக்க கூடாது-உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

கொரோனாவால் ஆதரவற்ற குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது!
 
no parents

தற்போது மக்கள் மனதில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்திய நோயாக ஆட்கொல்லி நோயாக கொரோனா காணப்படுகின்றன. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மேலும் பலரும் குடும்பத்தில் தொடர் பலிகளும் உருவாகிவிடுகிறது. ஒரு சில பகுதிகளில் குழந்தைகளை பெற்றோர் இழந்து  தவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோரை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அவர்கள் யாரும் இன்றி இருப்பதால் அவர்கள் அனாதைகளாக மாறும் அவலம் ஏற்பட்டுவிடும்.superme court

இதனை கருத்தில் கொண்டு தற்போது இந்தியாவில் முதன்மை நீதிமன்றமாக காணப்படுகின்ற உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி கொரோனா  பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதரவற்ற குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையத்தில் தகவல்களை பதிவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் தாய் தந்தை அல்லது இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் விபரங்களை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது  உச்சநீதிமன்றம். மேலும் ஆதரவற்ற குழந்தைகளின் அடிப்படை தேவை குறித்து அறியவும் அறிவுறுத்தியுள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் பசியுடன் இருக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத.இதனால் எந்த ஒரு குழந்தையும் இத்தகைய சூழலுக்கு தள்ளப்படும் அளிக்க உச்சநீதிமன்றம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web