ஜூலை 31-க்குள் முடிவுகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

 
students

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழு அமைத்து ஒவ்வொரு மாநிலமும் ஆய்வு செய்து வருகின்றன.

இந்த ஆலோசனை முடிந்த பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் கையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கல்லூரிகளில் தற்போது அட்மிஷன் தொடங்கியுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் கிடைக்காததால் அவர்கள் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிபிஐ பிளஸ் டூ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இடைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை சராசரியை வழங்க முடிவு செய்துள்ள நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அதே முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web