கோவை சிறுமி வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

கடந்த 2010ஆம் ஆண்டு கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்தப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, இருவரின் சடலங்களும் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. இதன் விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சொல்லப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு
 

கடந்த 2010ஆம் ஆண்டு கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்தப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, இருவரின் சடலங்களும் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. 

இதன் விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சொல்லப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார். 

கோவை சிறுமி வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!


 
மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து, மனோகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர். 

 

தமிழகத்தில் அதிகளவில் சிறுவர், சிறுமிகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வருத்தத்திற்குரியது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

From around the web