மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை: பல மாநில முதல்வர்கள் வரவேற்பு!

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை மாதங்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்தை கொண்டுவர முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்தும் வேளாண் மசோதா குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் உச்சநீதிமன்றமே இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தது 

supreme court

இந்த நிலையில் சற்று முன் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில்  அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் இந்த குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதற்கு புதுவை முதல்வர் உள்பட பல மாநில முதல்வர்கள் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web