அரசியல் அல்லது திமுக எதிரணிக்கு ஆதரவு: ரஜினியை சந்தித்த குருமூர்த்தி கோரிக்கை?

 
அரசியல் அல்லது திமுக எதிரணிக்கு ஆதரவு: ரஜினியை சந்தித்த குருமூர்த்தி கோரிக்கை?

அரசியலுக்கு வாருங்கள் அல்லது திமுக அணிக்கு எதிரான அணிக்கு ஆதரவு தாருங்கள் என ரஜினியை நேரில் சந்தித்து துக்ளக் ஆசிரியர் எஸ் குருமூர்த்தி அவர்கள் கோரிக்கை விடுத்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பார் என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று செய்திகள் வெளியாகி வந்தன 

இருப்பினும் பிப்ரவரி மாதம் அவர் அரசியல் கட்சி தொடங்கிய ஹோலோகிராம் 3டி டெக்னாலஜி மூலம் பிரச்சாரம் செய்வார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் துக்ளக் ஆசிரியர் எஸ் குருமூர்த்தி நேரில் சந்தித்து பேசினார் 

இந்த சந்திப்பின்போது 1996 ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டது போல் இந்த முறையும் நழுவவிட வேண்டாம் என்றும் அரசியலுக்கு வாருங்கள் அல்லது அரசியலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் திமுகவுக்கு எதிரான அணிக்கு ஆதரவு தாருங்கள் என ரஜினிகாந்திடம் எஸ் குருமூர்த்தி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது 

இது குறித்து ரஜினிகாந்த் என்ன பதில் கூறினார் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web