கொரோனாவோடு கொளுத்தும் வெயில்! தமிழகத்தில் தொடர் சோகம்!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
கொரோனாவோடு கொளுத்தும் வெயில்! தமிழகத்தில் தொடர் சோகம்!

தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருப்பர். காரணம் என்னவெனில் கோடை காலம் தொடங்கியதும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையானது அதிகரித்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பநிலையானது அதிகரித்து வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கும்.  தமிழகத்தில் ஒரு சில தினங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் மழைபெய்த மாவட்டங்களிலுள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

weather

மேலும் இன்றைய தினம் காலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு பெரும் சோகமான செய்தி ஒன்று கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் அது 22 மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் வரிசையில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பமானது அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சேலம் நாமக்கல் திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் பெரம்பலூர் அரியலூரில் வெப்பமானது அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கோடை காலம் வந்தாலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கத்தோடு  வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

From around the web