வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற நான்கு பேருக்கு  சம்மன்!

சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற விவகாரத்தில் 4 பேருக்கு சம்மன்!
 
வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற நான்கு பேருக்கு சம்மன்!

சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. அதற்கான தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் வாக்காளர் அனைவர்களுக்கும் பாதுகாப்பின் விதமாக அவர்களுக்கு முகக்கவசம் ,கையுறை போன்றவை வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளி  கடைப்பிடித்தும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

police

மேலும் தமிழகத்தில் வாக்கு பதிவானது காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக மிகவும் தீவிரமாக நடைபெற்றது .அதன் பின்னர் சீல் வைக்கும் பணியானது மிகவும் கவனத்துடன் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழக்கில் 4 பேருக்கு சம்மன் வழங்கியது. சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஸ்கூட்டரில் சென்றதாக  நான்கு பேருக்கு சம்மன் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவம் குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு 4 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வேளச்சேரியில் இந்த நான்கு பேர் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஸ்கூட்டரில் சென்றதாக தகவல் வெளியானது இதனால் இந்த விவகாரத்திற்கு அவர்களுக்கு சர்ச்சையான நிலைமை எழுந்துள்ள நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டது கூட்டத்தில் ஏற்கனவே மூன்று பேர் சஸ்பெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

From around the web