கோடைகாலம் தொடங்கியது- பறவைகள் விலங்குகளுக்கு நீர் கொடுங்கள்

கடும் கோடை தொடங்கி விட்டது. ஆங்காங்கே பல கண்மாய்கள், நீர்நிலைகள், ஏரிகள் வறண்டு விட்டது.மனிதர்களே தண்ணீருக்கு தேடி திரியும் நிலை உள்ளது. காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலையும் நீண்ட தூரம் சென்று நீர் எடுத்து வரும் அவல நிலையும் தொடர்கிறது. இந்த நிலையில் நிறைய பறவையினங்கள், விலங்குகள் தண்ணீர் இல்லாமல் அழிந்து வருகிறது. ஆதலால் நாம் தினமும் வீட்டின் மொட்டை மாடியில் சின்ன சின்ன பாத்திரங்களில் தண்ணீர் வைத்து விட்டால் பறவைகள் வந்து குடித்து
 

கடும் கோடை தொடங்கி விட்டது. ஆங்காங்கே பல கண்மாய்கள், நீர்நிலைகள், ஏரிகள் வறண்டு விட்டது.மனிதர்களே தண்ணீருக்கு தேடி திரியும் நிலை உள்ளது. காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலையும் நீண்ட தூரம் சென்று நீர் எடுத்து வரும் அவல நிலையும் தொடர்கிறது.

கோடைகாலம் தொடங்கியது- பறவைகள் விலங்குகளுக்கு நீர் கொடுங்கள்

இந்த நிலையில் நிறைய பறவையினங்கள், விலங்குகள் தண்ணீர் இல்லாமல் அழிந்து வருகிறது.

ஆதலால் நாம் தினமும் வீட்டின் மொட்டை மாடியில் சின்ன சின்ன பாத்திரங்களில் தண்ணீர் வைத்து விட்டால் பறவைகள் வந்து குடித்து செல்லும். சிட்டுக்குருவி உட்பட பல பறவையினங்கள் காக்கப்படும்.

வீட்டுக்கு வெளியேயும் நம்மால் முடிந்த அளவு தண்ணீர் வைத்தால் நாய்கள், பறவைகள், ஆடுகள் , கோழிகள் போன்ற அனைத்து ஜீவராசிகளும் தண்ணீர் குடித்து தாகத்தை தணித்துக்கொள்ளும்.

அனைவரும் இன்றிலிருந்து வீட்டின் மொட்டை மாடியில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர் வைத்து பழக்குவோம்.

From around the web