24 மணி நேரத்திற்குள் 10 மாவட்டத்திற்கு கொட்டப் போகுது கோடை மழை!

மராட்டியத்தில் விதர்பா முதல் தென் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் இரட்டை சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
24 மணி நேரத்திற்குள் 10 மாவட்டத்திற்கு கொட்டப் போகுது கோடை மழை!

தற்போது நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும்  உஷ்ணமும் உணரப்படுகிறது.இதனால் தமிழக மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர் காரணம் என்னவெனில் கோடைகாலம் தொடங்கினால் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலத்தடி நீர்மட்டம் குறைவும் ஏற்படும் .இந்நிலையில் தற்போது சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகின்றன.weather

தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மராட்டியத்தின் விதர்பா முதல் தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் இரட்டை சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரி மதுரை தேனி கரூர் சேலம் போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் நாமக்கல் திருநெல்வேலி தென்காசி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது ஏப்ரல் 30 மே 1, 2 ,3 ஆகிய தேதிகளில் கோவை நீலகிரி தேனி தென்காசி உள்ளிட்ட பழம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web