மேட்டூர் அணையை ஜூன் 12-இல் திறக்க ஆலோசனை; ஆனால் தேதி முதல்வர் அறிவிப்பார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்!
 
மேட்டூர் அணையை ஜூன் 12-இல் திறக்க ஆலோசனை; ஆனால் தேதி முதல்வர் அறிவிப்பார்!

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிகழ்கிறது. மேலும் தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக கட்சியின் மற்றுமொரு முக்கிய தலைவராக இருப்பவர் துரைமுருகன். அவர் சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.durai murugan

ஆனால் ஆரம்பம் முதலே அவருக்கு அத்தொகுதியில் பின்னடைவுகளும் அவர் தோல்வியைத் தழுவுவார் என்று எண்ணியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றதுடன் தற்போது தமிழகத்தில் அமைச்சராகவும் உள்ளார்.  இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் ஆலோசனை முடிந்தது, அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி செய்தியாளர்கள் எப்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கேள்வி கேட்டதற்கு, அவர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் கூறினார். மேலும் மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறப்பது பற்றி தஞ்சையில் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் எனவும் அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

மேலும் போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும் எனவும் அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் கூறினார். இந்த ஆலோசனையில் பன்னீர்செல்வம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குருவை சாகுபடி, பரப்பு ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

From around the web