திடீரென மூடப்பட்ட டெல்லி, பெங்களூரு கோ-ஆப்டெக்ஸ்…!

தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் சலுகை விலையில், ஜவுளிகள் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படாததும், வியாபாரத்தை பெருக்கும் வகையில் போதிய விளம்பரம் செய்யப் படாததும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய முயற்சி செய்யப் படாததும் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமாகும். இதன் காரணமாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு
 

தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் சலுகை விலையில், ஜவுளிகள் அறிமுகம் செய்யப்படும். 

இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படாததும், வியாபாரத்தை பெருக்கும் வகையில் போதிய விளம்பரம் செய்யப் படாததும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய முயற்சி செய்யப் படாததும் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமாகும். 

திடீரென மூடப்பட்ட டெல்லி, பெங்களூரு கோ-ஆப்டெக்ஸ்…!இதன் காரணமாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் 18 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதற்கு நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதனை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கிளைகளை மூடும் வேலையில் ஈடுபடுவதாக நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 


இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறுகையில், நவீன மயமாக்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான லாபத்தை எடுக்காமல் மூடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தொடங்கப்பட்ட டெல்லி, பெங்களூரு விற்பனை நிலையங்கள் திடீரென மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 

From around the web