திடீரென ஏறிய தங்கத்தின் விலை: பெரும் பரபரப்பு 

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது. அதனை அடுத்து தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியும் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்தவர்கள் சோகமும் அடைந்தனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இறக்கத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை ரூபாய் ஒரு சவரன் விலை 39000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 248 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தங்கத்தின் விலை நேற்றும் ரூ.256 உயர்ந்த நிலையில் இன்றும் ஒரு சவரனுக்கு  ரூ.248 உயர்ந்துள்ளது. அதாவது இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு ரூபாய் 500க்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4881 என்ற விலையில் விற்பனையாகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

From around the web