மியான்மரில் திடீர் ராணுவ புரட்சி: ஆங் சான் சூகி கைது

 

மியான்மர் நாட்டில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அந்நாட்டின் அதிகார தலைவராக இருந்த ஆங் சாங் சூகி என்பவர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. ஆனால் ஆங் சாங் சூகி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்திய நடத்தியதால் கடந்த 2015ஆம் ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பதும், இந்த தேர்தலில் ஆங் சாங் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

aung san syi

இருப்பினும் அவர் வெளிநாட்டு உரிமை பெற்றிருந்ததால் அவரால் அதிபர் பதவியை பெற முடியவில்லை. இதனையடுத்து அவர் அதிகார தலைமை பொறுப்பில் மட்டும் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆங் சான் சூசி தலைமையிலான கட்சி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில்தான் திடீரென ராணுவத்தினரால் ஆங் சாங் சூகி சிறை பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒரு ஆண்டிற்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட ஆங்சாங் சுகி உள்பட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web