ஆளுநரோடு திடீர் சந்திப்பு; நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் "அவசர பேச்சுவார்த்தை"!

கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது!
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் முதல்வராக உள்ளார் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் மேலும் அவர் தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தலில் கூறியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார் மற்றும் சில பல எதிர்க்கட்சிகளும் அவருக்கு எதிராக கூறுவதோடு மட்டுமின்றி வன்மையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.stalin

அவர் கூறிய வாக்குறுதி மட்டுமின்றி கால சூழலுக்கேற்ப நலத்திட்டங்களையும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநர் உடன் திடீர் சந்திப்பு நடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகளை குறித்து ஆளுநரிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆளுநர் முதல்வர் சந்திப்பில் தலைமைச் செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ள தாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தை முடிவில் சில பல தகவல்கள் வெளியாகும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web