திடீரென நடந்த கமல்-ரஜினி சந்திப்பு: அடுத்தகட்ட திட்டம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என தனது ரசிகர்களுக்கு நீண்ட விளக்கத்துடன் கூடிய ஒரு அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார் என்பதும் அதனை அடுத்து அவரது ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென கமல்-ரஜினி சந்திப்பு இன்று சென்னையில் நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் கட்சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? அல்லது ரஜினி மீண்டும் அரசியலுக்கு வந்து இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க போகிறார்களா? என்பதை ரஜினியை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் கமல் சந்தித்தால் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதிபடக் கூறி விட்டாலும் இன்னும் அவர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை பலிக்குமா? அல்லது இருவரும் சேர்ந்து வேறு ஏதேனும் அடுத்தகட்ட திட்டம் வைத்துள்ளார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே சமயம் தனது கட்சிக்கு ரஜினியின் ஆதரவை கேட்பேன் என்று கமல்ஹாசன் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிய நிலையில் அவருக்கு கமல் ஆதரவளிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்