டிரம்புக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியவர் திடீர் மரணம்: பரபரப்பு தகவல்

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பதும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையான குணமடையாத நிலையிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் சிலை வைத்து அவருக்கு வழிபாடு செய்து வந்தார், இந்த நிலையில் திடீரென அவர் தற்போது மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி வாரம் ஒரு முறை அந்த சிலைக்கு அபிஷேகம் நடத்தி பூஜை செய்தும் வந்ததாக தெரிகிறது. கிட்டத்தட்ட கடவுள் போல அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலை கும்பிட்டு வந்த கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து அவரை காப்பாற்றுவதற்காக குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலை வைத்த இந்தியர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web