நீட் தேர்வில் திடீர் மாற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி

 
neet result3

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விருப்பத் தேர்வு முறையை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் என்று நான்கு பாடங்களிலும் செக்சன் ஏ மற்றும் செக்சன் பி என தேர்வுத்தாள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு நீட் தேர்வில் விருப்பத்தேருவு அறிமுகம் செய்யப்படுகிறது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதன்படி செக்சன் ஏ பிரிவில் மொத்தம் 35 கேள்விகள் கேட்கப்படும் என்றும், செக்சன் பி பிரிவில் 15 கேள்விகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது. இதில் செக்சன் ஏவில் உள்ள 35 கேள்விகளுக்கும் மாணவர்கள் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். ஆனால் செக்சன் பி’யில் உள்ள 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும் என்ற முறையில் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தமிழ் தெலுங்கு மலையாளம் உருது உள்பட 13 மொழிகளில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு நீட் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web