திருவண்ணாமலை கிரிவலத்திற்கு திடீர் தடை: கலெக்டர் உத்தரவால் பரபரப்பு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை கிரிவலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் சுற்ற ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதி நடைபெறும் கிரிவலத்திற்கு திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தடை விதித்துள்ளார் 
இதுகுறித்து அவர் கூறியதாவது அக்டோபர் 1,2 இல் நடக்கவிருந்த திருவண்ணாமலை கிரிவலத்தில் தடை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த தடையால் கிரிவல பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

திருவண்ணாமலை கிரி வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web