சாத்தான்குளம் வீடியோவை திடீரென நீக்கிய சுசித்ரா: என்ன காரணம்?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம் உள்ளூர் பிரச்சனையாக மட்டும் இருந்த நிலையில் பாடகி சுசித்ரா இது குறித்து ஆங்கிலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட பின்னரே நாடு முழுவதும் பரவியது இந்த நிலையில் இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது சாத்தான்குளம் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை யாரும் தெரிவிக்க
 
சாத்தான்குளம் வீடியோவை திடீரென நீக்கிய சுசித்ரா: என்ன காரணம்?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் உள்ளூர் பிரச்சனையாக மட்டும் இருந்த நிலையில் பாடகி சுசித்ரா இது குறித்து ஆங்கிலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட பின்னரே நாடு முழுவதும் பரவியது

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது சாத்தான்குளம் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்றும் இது குறித்து வீடியோவை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது

இதனை அடுத்து தற்போது சிபிசிஐடி போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சுசித்ராவின் வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், போலீசாருக்கு எதிராக தூண்டி விடுவது போல அந்த வீடியோ இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வீடியோவை நீக்கிவிட்டார். இருப்பினும் இந்த வீடியோவை பலர் பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோ இன்னும் சமூகவலைதளத்தில் உலாவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web