அடுத்தடுத்து அதிரடி மாற்றம்! "12 ஐஏஎஸ்" அதிகாரிகள் பணி மாற்றம்!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ias

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் திமுக கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின். அவர்தான் தேர்தலில் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். மக்களுக்கு பல்வேறு விதமான நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அனைவரும் அவரை மிகவும் மதித்து வருகின்றனர்.tamilnadu

இந்நிலையில் தற்போது அவர் தலைமையில் 34 அமைச்சர்கள் அவருடன் சேர்த்து உள்ளனர். இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்திலுள்ள பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமூக நலத் துறையில் இருந்து ஆதிதிராவிட நலத் துறை ஆணையராக மதுமதி ஐஏஎஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தர்மபுரி கலெக்டர் கார்த்திகா உயர்கல்வித் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தோட்டக்கலைத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இது போன்று 12 ஐஏஎஸ்   அதிகாரிகளை தற்போது பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இதனால் அவர்கள் தமிழகத்தில் பிற துறைகளிலும் தங்களது பொறுப்பான ஈடுபாட்டில் பணியினை செய்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web