தோனியின் எழுச்சியூட்டும் தலைமை அரசியலுக்கும் தேவைப்படும்: சுப்பிரமணியன் சுவாமி

தல தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து சமூக வலைதளங்கள் ஸ்தன்பித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சாதனைகளை பாராட்டி அவர் ஓய்வு பெற்றதற்கு வருத்தம் தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபல கிரிக்கெட் பிரபலங்களும் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியம்சுவாமி அவர்கள் தோனியின் ஓய்வு குறித்து தனது
 

தோனியின் எழுச்சியூட்டும் தலைமை அரசியலுக்கும் தேவைப்படும்: சுப்பிரமணியன் சுவாமி

தல தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து சமூக வலைதளங்கள் ஸ்தன்பித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சாதனைகளை பாராட்டி அவர் ஓய்வு பெற்றதற்கு வருத்தம் தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபல கிரிக்கெட் பிரபலங்களும் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியம்சுவாமி அவர்கள் தோனியின் ஓய்வு குறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு பதிவு செய்துள்ளார். அதில் தோனி அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார். மற்றவர்களிலிருந்து அல்ல

அவரது எழுச்சியுடன் கூடிய தலைமையை பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிரூபித்த எழுச்சித் தலைமை அரசியல் என்ற பொது வாழ்க்கையிலும் கண்டிப்பாக தேவைப்படும். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்

இதிலிருந்து அவர் தோனியை மறைமுகமாக பாஜகவில் சேர சொல்லி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது. ஏற்கனவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கௌதம் காம்பீர் பாஜகவில் இணைந்து எம்பி ஆகியுள்ள நிலையில் தோனியும் பாஜகவில் இணைவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web