படுத்துக்கொண்டே தேர்வு எழுதிய மாணவர்கள்: ஆப்செண்ட் போட்ட அண்ணா பல்கலை

 

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் சமீபத்தில் ஆன்லைனில் நடந்த நிலையில் இந்த தேர்வை சீரியசாக எழுதாமல் படுத்துக்கொண்டும் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டும் சில மாணவர்கள் எழுதியதாகத் தெரிகிறது. அவ்வாறு பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்செண்ட் போட்டு அதிரடி அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சமீபத்தில் நடந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வை சிலர் படுத்துக்கொண்டும் டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு எழுதியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் தேர்வு என்றாலும் அதனை சீரியஸாக கருதாமல் இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை முடிவு செய்தது

இதனை அடுத்து அண்ணா பல்கலை அவ்வாறு முறைப்படி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வு முடிவுகள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web