பிளஸ் 2 தேர்வை எழுத தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டன. இருப்பினும் கடைசி தேர்வுகளான வேதியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வு நடைபெறும்போது கொரனோ பயம் காரணமாக ஒரு சில மாணவர்கள் அந்த தேர்வை எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது இதனால் தேர்வு எழுதாத அந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சி
 

பிளஸ் 2 தேர்வை எழுத தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டன. இருப்பினும் கடைசி தேர்வுகளான வேதியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வு நடைபெறும்போது கொரனோ பயம் காரணமாக ஒரு சில மாணவர்கள் அந்த தேர்வை எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் தேர்வு எழுதாத அந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஆளும் கட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்கள் குறித்த விபரங்களை 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் தவறவிட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web