மாணவர்கள் கொண்டாட்டம் வாரம் 5 நாள் மட்டுமே பள்ளி!

புதுச்சேரியில் வாரம் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளி இயங்கும் என அறிவிப்பு!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கொரோனா பாதிப்பானது தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பானது முதலில் சீனாவில் இருந்தது. கடந்தஆண்டு தொடக்கத்திலேயே கொரோனா பாதிப்பானது இந்தியாவிலும் பரவியதாக தகவல் வெளியானது. இதனால் இந்திய அரசானது தொடக்கத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நாடு முழுவதும் ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.

corona

இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் மிகவும் கொரோனா பாதிப்பானது  அதிகரித்து வருகிறது.  இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அம்மாநில அரசு அறிவித்தது. மேலும் தமிழக அரசானது இடையேயான  இ பாஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தற்போது புதுச்சேரி அரசானது அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன் படி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும்  பள்ளி நடைபெறும் எனவும் அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பு . மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக வருகைப்பதிவேடு குறைக்கப்பட்டது எனவும் கூறுகிறது.

From around the web