"தனியார்" பள்ளிக்கு இணையாக "அரசு" பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிச்சயம் இருக்கும்!!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்!
 
school

தற்போது நம் தமிழகத்தில் முதலமைச்சராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் தான் முதலமைச்சர் ஆனவுடன் மக்களுக்கு நல்லது செய்ய இருக்கும் கட்சி பணியாற்றுவதற்கு அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். மேலும் அவர்கள் அத்துறையில் மிகவும் சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். மேலும் அவரிடம் சில தினங்களாகவே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி கேள்வி கேட்கப்படுகிறது.anbil mahesh

 தற்போது அவர் சில முக்கியமான அறிவிப்புகளை கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளிகளுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் கல்வி கட்டணம் தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுப்பதற்கு அமைக்கப்பட்ட கமிட்டியை வலுப்படுத்த திட்டம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிகழ்கின்ற நிலையில் அது குறித்து தமிழக அமைச்சராகயுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிலவற்றை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மீது புகார் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வகையில் வலுப்படுத்த திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

From around the web