இடைக்கால தடை என்றாலும் போராட்டம் தொடரும்: விவசாயிகள் அறிவிப்பு

 

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 49 நாட்களாக பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் 

இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது

supreme court

ஆனால் அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவானது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது வேளாண் மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டே ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அந்த குழுவினர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேசுவார்கள் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து விரைவில் விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இடைக்கால தடை விதித்தாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின் 32 விவசாய சங்கங்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web