தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் கடும் கட்டுப்பாடுகள்!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில்  மிகவும் கண்காணிப்புடன் பாதுகாக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் நடைபெற்றது. கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

mask

அங்கும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மிகவும் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்புகள் மத்தியில் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று  தமிழக அரசானது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியது. திருமண விழாக்களில் 100 பேருக்கு தான் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஊர்வலங்கள் கோவில் திருவிழாக்கள் நடத்த தடையும் விதித்துள்ளது.

மேலும் தியேட்டர்களில் 50 இருக்கைகளுடன் படம் பார்க்கவும் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது கேரள அரசும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கேரளாவிலும் சில தினங்களாக கொரோனாவின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இதனால் கேரள அரசு தற்பொழுது இன்று முதல் கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது. அதன்படி முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம்  கூடுதல் அபராதம் வசூலிக்க ஆணையைப் பிறப்பித்துள்ளது. மேலும் பொது இடங்களில் அதிக நபர்கள் கூடுவதை போலீசார் கண்காணிக்கவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web