சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்… சுகாதாத்துறை அமைச்சர் பேட்டி!!

இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் கால்பதித்த கொரோனா வைரஸ் ஒரு மாதங்களைக் கடந்தநிலையிலு இரண்டாம் கட்டத்திலேயே இருந்தது, அதன்பின்னர் இந்த மாதத் துவக்கத்தில் அசுர வேகத்தில் பரவிய வைரஸால் மூன்றாம் கட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க, மார்ச் 24 ஆம் தேதி நான்கு கட்டமாக ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, இந்தநிலையில் நாளை ஊரடங்கானது முடியவுள்ள நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாகும் என்று சுகாதாத்துறை அமைச்சர் கூறியுள்ளார். விஜயபாஸ்கர் கூறும்போது, “இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கொரோனாவின்
 
சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்… சுகாதாத்துறை அமைச்சர் பேட்டி!!

இந்தியாவில் மார்ச் மாதத் துவக்கத்தில் கால்பதித்த கொரோனா வைரஸ் ஒரு மாதங்களைக் கடந்தநிலையிலு இரண்டாம் கட்டத்திலேயே இருந்தது, அதன்பின்னர் இந்த மாதத் துவக்கத்தில் அசுர வேகத்தில் பரவிய வைரஸால் மூன்றாம் கட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க, மார்ச் 24 ஆம் தேதி நான்கு கட்டமாக ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, இந்தநிலையில் நாளை ஊரடங்கானது முடியவுள்ள நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாகும் என்று  சுகாதாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்… சுகாதாத்துறை அமைச்சர் பேட்டி!!

விஜயபாஸ்கர் கூறும்போது, “இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரொனாவின் தீவிரம் குறைந்தபோதிலும், கொரொனாவினைக் கட்டுப்படுத்த முடியாமல் தலைநகரான சென்னை போராடி வருகின்றது.

இதனால் கொரொனாவைக் கட்டுக்குள் எப்படியும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் இப்போதைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளது.

அரசுடன் இணைந்து கொரோனா விரட்டுவோம், அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம். கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாமால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், சென்னை கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டால் நம்மால் எளிதில் கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

From around the web