கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வினோத ஆடு!

 

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது திடீரென விலங்குகள் மைதானத்துக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்துவது குறித்த நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன 

இந்த நிலையில் கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வினோதமான ஆடு ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் யார்க்சயர் என்ற பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென வினோதமான ஆடு ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது. 

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த அல்பாகா என்ற இன ஆடு, உடல் முழுவதும் உரோமத்துடன் பார்க்கவே வித்தியாசமாக இருந்ததால் விளையாட்டு வீரர்கள் போட்டியை நிறுத்திவிட்டு அந்த ஆட்டை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் அந்த ஆடு சில நிமிடங்கள் மைதானத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று திணறிக் கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக போட்டியாளர்கள் அந்த ஆட்டை மைதானத்தை விட்டு வெளியேற்றினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web