நியூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள்- வைகோ!

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய அரசை வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில், “தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. அதற்காக, 1200 டன் டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப்
 

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய அரசை வலியுறுத்தி உள்ளார். 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில், “தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. 

நியூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள்- வைகோ!


அதற்காக, 1200 டன் டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப் பாறைகளையும், ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் பாறைகளையும் உடைத்து நொறுக்கப் போகின்றார்கள். இந்த சுரங்கம் ஒரு கிலோ மீட்டர் நீளம் 25 மீட்டர் அகலம் 15 மீட்டர் சுற்றளவில் அமைகின்றது. 

உள்ளே பக்கவாட்டில் மேலும் இரண்டு சுரங்கங்கள் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். இந்த மூன்று சுரங்கங்களும் இணைகின்ற மையப் புள்ளியில் மட்டும் 11 லட்சம் டன் பாறை வெட்டி எடுக்கப்பட இருக்கின்றது. 


எனவே 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22 ஆம் நாள் மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து இருக்கின்றது. 

அதேபோல, பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தடை ஆணை பெற்று இருக்கின்றது. 


எனவே, நாகசாகி ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது. கேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோர் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். 

எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு இந்திய அரசை வலியுறுத்துகின்றேன்” என்று கூறினார். �� Ԟ�

From around the web