ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிறுத்துக! "ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டு பேட்டி"

ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைக ளை திமுக அரசு நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர்
 
eps ops

தற்போது நம் தமிழகத்தில் எதிர் கட்சியாக உள்ளது  அதிமுக. மேலும் பத்தாண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவர் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்கள் அளிப்பது மட்டுமின்றி ஆளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது சொல்லிக்கொண்டே வருவார். இந்த சூழலில் தற்போது திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்து வருகின்றனர்.admk

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பேட்டியில் சில கருத்துகளை கூறி வருகின்றனர். அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பொய் வழக்குகளின் அடிப்படையில் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் எவ்வித அச்சுறுத்தல்களையும் சட்டப்படி எதிர் கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 மேலும் அந்த பேட்டியில் அண்ணாமலை  பல்கலைக்கழகத்தை இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அதிமுக சார்பில் கண்டறிந்ததாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்தை அதிமுக எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழக இனைப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web