ஸ்டெர்லைட்: இரண்டாவது அலகில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு சோதனை!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2-வது அலகில் ஆக்சிசன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது!
 
sterlite

தமிழகத்தில் முத்து நகரம் என்று  அனைவரும் முதலில் கூறுவது தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகரத்தில் முத்து குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் அங்கு தயாரிக்கப்படும் உப்பானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது. மேலும் அங்கு மிகப் பெரிய பொருளாதாரமாக காணப்படுகிறது. தூத்துக்குடியில் சில வருடங்களுக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது மிகுந்த வேதனை அளிக்கிறது. அப்பாவி ஜனங்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காரணம் என்னவெனில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த வாயு வெளியாவதால் அப்பகுதி மக்கள் அந்த ஆலையை மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.sterlite

மேலும் அவர்கள் மீது கலகக்காரர்கள் என்று கூறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதற்கு வன்மையாக பலரும் கண்டித்தனர் மேலும் பல பெரும் போராட்டத்திற்கு பின்னர் இந்த ஸ்டெர்லைட் ஆலை ஆனது சில வருடங்களாக மூடியிருந்த நிலையில் தற்போது ஆக்சிசன் உற்பத்திக்காக மீண்டும்  திறந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யபடுகிறது.

அது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது, அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகில் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் அனுமதியை அடுத்து முதல் அலகில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போது இரண்டாம் அலகில் சோதனைக்கு பின்னர் அங்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web