ஸ்டெர்லைட்டை திறக்கலாம் ஆனால் சில பல விதிமுறைகள்; "எதிர்ப்பு குழு மனு!"

காக ஸ்டெர்லைட் ஆலையை அரசு ஏற்று நடத்தலாம் என்று எதிர்ப்பு குழு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்!
 
ஸ்டெர்லைட்டை திறக்கலாம் ஆனால் சில பல விதிமுறைகள்; "எதிர்ப்பு குழு மனு!"

தமிழகத்தில் சில தினங்களாக கொரோனாவின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியமுழுவதும் தற்போது ஆக்சிசன் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இதற்கு உதவும் வண்ணமாக தமிழகத்தில் சில வருடங்களாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை தாங்கள் ஆக்சிசன் உற்பத்தி பண்ண அனுமதிக்கவேண்டும் என்று கூறியிருந்தது.sterlite

ஆனால் இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு அனைத்து கட்சிகளும் ஒருவித முடிவினை எடுத்தது மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.மேலும் இதற்கு எதிராக எதிர்ப்பு குழுவும் மனு தாக்கல் செய்கிறது. மேலும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்சிசன் உற்பத்திக்காக அரசே ஏற்று நடத்தலாம் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள தாமிரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர். மேலும் ஆக்சிசன் உற்பத்திக்கான இயந்திரங்களை மட்டும் வைத்து உற்பத்தியை தொடங்கலாம் என்றும் மக்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பானது தற்போது ஆட்சியர் செந்தில் ராஜிடம் மனு கொடுத்துள்ளனர்.

From around the web