"இனிமேல் மெரினாவில் படகு சவாரி;''தொடங்க நடவடிக்கை!

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
marina

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்கள் வரிசையாக திறந்து வருகிறது. மேலும் ஒரு சில சுற்றுலாத் தலங்களில் பல கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. மேலும் பல சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதற்கு கூட அனுமதி இன்றளவும் கொடுக்கப்படவில்லை. காரணம் தற்போது நம் தமிழகத்தில் நோய் பரவல் உச்சத்தில் இருந்து தற்போது படிப்படியாக குறைந்து காணப்பட்டுள்ளது. ஆயினும் மக்களிடையே இந்த நோயின் அறிகுறி அவ்வப்போது தென்படுகிறது.mathivendhan

இதனால் பல பகுதிகளில் பலவற்றிற்கு இன்றளவும் தடைகள்  காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீண்ட கடற்கரை என்ற பெயரைப் பெற்றுள்ள மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை என்று கூறியுள்ளார் சுற்றுலா துறை அமைச்சர் மதி வேந்தன்.  இதனை சட்டப்பேரவையில் மதி வேந்தன் அறிவித்துள்ளார்.

மேலும் ஏலகிரி ஜவ்வாது மலை பகுதிகளில் பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவுகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் நீர்த்தேக்கங்கள் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் கூறியுள்ளார்.சுற்றுலா துறை சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும் என்று மதி வேந்தன் கூறியுள்ளார்.

From around the web