டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய 9 இடங்களில் மண்டல பூச்சியியல்ஆய்வுக் குழு  அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தகவல்!
 
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. ஆயினும் தமிழகத்தில் ஆட்கொல்லி நோய் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கொரோனா நோயானது முதன்முதலில் சீன நாட்டில் உருவானது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவியது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவியது. மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதிவரை முழு ஊரடங்கு திட்டம் நடைமுறையில் இருந்தது.

tamilnadu

மேலும் இந்தியாவில் சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு நோய் குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடுத்திருந்தார்.

தற்போது டெங்கு குறித்து தமிழக அரசானது தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த 2715 தற்காலிக கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய ஒன்பது இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியானது.

மேலும் இந்த வழக்கினை வழக்கறிஞர் சூரிய பிரகாசம் இந்த தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி டெங்குவின் தாக்கமும் உருவாக உள்ளதால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

From around the web