50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை அமெரிக்காவில்: அதிர்ச்சி தகவல்!
 

 
50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை அமெரிக்காவில்: அதிர்ச்சி தகவல்!


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, முத்தாம்பாள்புரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு உற்சவ மூர்த்தி சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் காலசம்ஹாரமூர்த்தி சிலைக்கு பதிலாக போலியான சிலையை வைத்துவிட்டதாகவும், உண்மையான தொன்மையான காலசம்ஹாரமூர்த்தி சிலையை வெளிநாட்டுக்கு சிலர் கடத்திவிட்டதாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து கோவிலின் செயல் அலுவலர் ஆய்வு செய்தபோது 24 உற்சவர் சிலைகளும், கற்சிலைகளும் சொத்துப் பதிவேட்டின்படி எண்ணிக்கையில் சரியாக இருந்தாலும், கோயிலில் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு சரிபார்த்தபோது தொன்மையான காலசம்ஹாரமூர்த்தி உற்சவர் சிலையானது மாற்றப்பட்டது தெரியவந்தது. 

இதுகுறித்து சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. சிலைத்திருட்டு தடுப்பு பிரிவினர் இதுகுறித்து தீவிர விசாரணை செய்த நிலையில் தற்போத் அந்த உண்மையான சிலை அமெரிக்காவில் உள்ளது என தெரிய வந்ததுள்ளது

தஞ்சை ஒரத்தநாடு முத்தம்மாள்புரத்தில்  50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன காசி விஸ்வநாதர் கோயில் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web