அரசுடமையாக்கப்பட்ட சுதாகரன், இளவரசி சொத்துகள்: சசிகலா வரும் தினத்தில் அரசு அதிரடி

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஆங்காங்கே பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழக எல்லையில் பட்டாசுகள் முழங்க சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவை ஒரு பக்கம் அதிமுக தொண்டர்கள் உள்பட அமமுக தொண்டர்களும் வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக அரசு அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

ilavarasi

சசிகலாவின் உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய இருவரின் ஒரு சில சொத்துக்கள் திடீரென அரசுடமையாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் படி இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசிடமிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா சென்னைக்கு வரும் அதே நாளில் அவருடைய உறவினர்களின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web