மீண்டும் இந்த மாதம் "2000 ரூபாய்"; நாளை "கருணாநிதி பிறந்தநாள்" முன்னிட்டு தொடக்கம்!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை முதல் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!
 
dmk

தற்போது நம் தமிழகத்தில் திமுக கட்சியின் ஆட்சியை நடைபெறுவது என்றே கூறலாம். அதன்படி நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் தான் தேர்தல் கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் காலகட்டத்திற்கு ஏற்ப நிறைவேற்றி வந்து மக்களுக்கு நல்லதொரு மதிப்பினை பிடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தேர்தல் வாக்குறுதியில் மிகவும் முக்கியமாக காணப்பட்டது மாதம் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது.2000

இதில் கடந்த மாதம் மட்டும் 2,000 ரூபாய் வழங்கியது திமுக அரசு. காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் 2,000 ரூபாயும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிவாரண தொகையானது மீண்டும் வழங்கப்பட உள்ளதாகவும் அவை இந்த மாதமும் தொடரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அதனை நாளை தொடங்கி வைக்கிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

மேலும் கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்குவதை தொடங்கி வைக்க உள்ளார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள் நாளை என்பதால் அவரின் மகனும் தற்போதைய தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நாளைய தினம் முதல் இத்தகைய திட்டத்தை மீண்டும் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்குவதையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மாநகராட்சி பணியாளர்களின் 63 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் நாளை வழங்குகிறார். மேலும் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

From around the web