தொடங்கியது கண்காணிப்புக்குழு ஸ்டெர்லைட் ஆலையில்;மெட்டீரியல் கேட் வழியா  என்றி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது!
 
sterlite

மக்களிடையே முத்து நகரமாக உள்ளது தூத்துக்குடி மாவட்டம். தூத்துக்குடி  மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உப்பானது தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த தூத்துக்குடி மீன்பிடி தொழிலும் மிகவும் சிறப்பான ஒன்றாக காணப்படுகிறது. இத்தகைய தூத்துக்குடியில் சில வருடங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் என்னவெனில் தூத்துக்குடி இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.sterlite

மேலும் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகை அனைவரையும் பாதிப்பதாக அப்பகுதியில் வாழும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் கலகக்காரர்கள் என்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் அதில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது/ மேலும் இதில் வேதனை என்னவென்றால் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு எதிராக பல தலைவர்களும் போராட்டம் பண்ண ஸ்டெர்லைட் ஆலை சில வருடங்களாக மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆலையை திறப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட பட்டது.

மேலும் இதில் நான்கு மாத காலத்திற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இயங்க அனுமதிக்க உள்ளதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. காரணம் என்னவெனில் இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவாமல் இருக்கவும் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு ஒருமனதாக   தீர்மானம் எடுக்கப்பட்டது.தற்போதைய நிலையில் கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் மெட்டீரியல் கேட் வழியாக சென்று ஆய்வு செய்து வருகிறது. ஜெயக்குமார், உதவி பேராசிரியர் கனகவேல் உள்ளிட்டோரை கொண்ட குழு ஸ்டெர்லைட் இல் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆயினும் அப்பகுதி மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் அதற்கு எதிராக கருப்பு கொடி காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web