ஊரடங்கு காலத்தில் 24,000 பேருக்கு இலவச உணவு வழங்கிய நட்சத்திர ஹோட்டல்..

கொரோனா பாதிப்பு தீவிரமானதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருநாளும் உணவின்றித் தவித்து வந்தனர். இவர்களுக்கு சினிமாப் பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழில்துறை நிறுவனர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைப் பொருளாகவோ, பணமாகவோ செய்து வந்தனர். அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் சுமார் 24,000 பேருக்கு இலவச உணவுகளை வழங்கிய சென்னையைச் சார்ந்த துவாரகா ஹோட்டல் நிறுவனருக்கு
 
ஊரடங்கு காலத்தில் 24,000 பேருக்கு இலவச உணவு வழங்கிய நட்சத்திர ஹோட்டல்..

கொரோனா பாதிப்பு தீவிரமானதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொருநாளும் உணவின்றித் தவித்து வந்தனர். இவர்களுக்கு சினிமாப் பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழில்துறை நிறுவனர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைப் பொருளாகவோ, பணமாகவோ செய்து வந்தனர்.

அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் சுமார் 24,000 பேருக்கு இலவச உணவுகளை வழங்கிய சென்னையைச் சார்ந்த துவாரகா ஹோட்டல் நிறுவனருக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


அதாவது சென்னையில் துவாரகா என்னும் நட்சத்திர ஓட்டலை நடத்திவரும் பிரவீண் என்பவர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், ஓட்டலை மூடாமல், அங்கு தினம் தோறும் 400 பொட்டலங்கள் உணவினைத் தயாரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் 24,000 பேருக்கு இலவச உணவு வழங்கிய நட்சத்திர ஹோட்டல்..


ஒரு நபருக்கு அதிகபட்சமாக 5 பொட்டலங்கள் வரை என தினசரிக்கு 800 பேருக்கு உணவு வழங்கிய அவர், அதன்பின்னர் 500 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பல ஆண்டுகளாக ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறேன், அவ்வப்போது என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். மக்கள் பசியால் வாடும் இந்தநிலையில் இந்த உதவியை செய்ய நினைத்தேன். இதுவரை 24,000 பேருக்கு உணவு வழங்கியுள்ளது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

From around the web