தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற முக ஸ்டாலின்!

 

தமிழக அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், 100 பெண்கள் கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்றார். கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம் என்று கூறிய அவர், கிராம சபை கூட்டம் அல்ல இது மக்கள் சபை கூட்டம் என்றார்

மேலும் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் என்றும், கிராம பிரச்சினைகளை தீர்க்க கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது என்றும் கூறினார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web