பிளஸ் 1, பிளஸ் 2வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு: முக ஸ்டாலின் வரவேற்பு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்,. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் இந்த பாத்திட்ட முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக
 

பிளஸ் 1, பிளஸ் 2வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு: முக ஸ்டாலின் வரவேற்பு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்,.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் இந்த பாத்திட்ட முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத்திட்டமே தொடரும் என்பது உறுதியானது

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘ ‘குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? ‘சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! என்று தெரிவித்துள்ளார்

From around the web