ஒரே மாதிரி இரங்கல் தெரிவித்த முக ஸ்டாலின் மற்றும் வைரமுத்து: நெட்டிசன்கள் ஆச்சரியம் 

நீட் தேர்வு பயம் காரணமாக இன்று காலை மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் திரை உலக பிரமுகர்கள் டுவிட்டரில் ட்வீட்டுகள் பதிவு செய்து வருகின்றனர் 

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்துக்களை தங்களது ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். நீட் என்பது தேர்வும் அல்ல தற்கொலை என்பது தீர்வும் அல்ல என்ற கருத்தை தான் இருவரும் தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் 

இது குறித்து மு க ஸ்டாலின் மற்றும் கவியரசு வைரமுத்து ஆகியோர் கூறியிருப்பதாவது:

முக ஸ்டாலின்: நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை  செய்தது அதிர்ச்சி! நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்; தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!

வைரமுத்து:

ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும்  தங்களை 
அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.

From around the web