நோயாளிகளுக்கு சிகிச்சை தர சிறப்பு ரயில்கள் தயார்!தெற்கு ரயில்வே!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர சிறப்பு ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல்!
 
நோயாளிகளுக்கு சிகிச்சை தர சிறப்பு ரயில்கள் தயார்!தெற்கு ரயில்வே!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வலம் வந்து காணப்படுகிறது கொரோனா வைரஸ்.கொரோனா முதன் முதலில் நட்பு நாடான சீனாவின் கண்டறியப்பட்டு அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா நோயானது கண்டறியப்பட்டு அதன்பின்னர் கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியது.

train

மேலும் அதற்காக பல மாநில அரசுகள் பல்வேறு விதிகளையும் விதித்துள்ளன. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் சில தகவல்களும் விதித்தன. மேலும் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களையும் தெற்கு ரயில்வே சார்பில் போடப்பட்டிருந்தன. அதன்படி சளி காய்ச்சல் இருமல் உள்ளவர்கள் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வேண்டு கோள்   விடுத்தன. தெற்கு ரயில்வே சார்பில் மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அளித்துள்ளது.

அதன்படிகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறியது. மேலும் 21 பெட்டிகள் கொண்ட ரயிலில் படுக்கை வசதி ஆக்சிஜன் சிலிண்டர் தயார் நிலையில் இருப்பதாக தெற்கு ரயில்வே சார்பில் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு கேட்டால் சமயநல்லூர் ரயில் நிலையத்தில் , ரயில் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த ஆண்டிலும் பல மாநிலங்களில் உள்ள ரயில் பெட்டிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web