தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

 
train

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்து உள்பட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தாலும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு சில ரயில்கள் நிறுத்தப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 'ஏசி' டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் ரயில் மற்றும் நாகர்கோவில் - கோவை, கோவை - மங்களூருஆகிய ரயில்கள் ஆகிய சிறப்பு ரயில்கள் ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் திரும்ப வந்துவிடும் என்றும் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் எடுத்தவர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web