ஊரடங்கு எதிரொலி அத்துணை சிறப்பு ரயில்களும் ரத்து! "மே 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி"!!

சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி செல்லும் நான்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே!
 
ஊரடங்கு எதிரொலி அத்துணை சிறப்பு ரயில்களும் ரத்து! "மே 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி"!!

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளது. மேலும் குறிப்பாக தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .மேலும் மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அத்துணை அனைத்து மளிகை கடைகள் போன்றவைகளும் 10:00 யோடு மூடப்பட்டிருக்கும் என்று இவை இன்று முதல் அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.southern railway

இதற்கு  பொது மக்களும் தங்களது வெளியூர் பயணத்தை அதிக அளவு ரத்து செய்துள்ளனர். இதனால் ரயில்வே போக்குவரத்திலும் பயணிகள் குறைவாக வருகின்றனர் .இதன் எதிரொலியாக தற்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி செல்லும் நான்கு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எழும்பூர் முதல் திருச்செந்தூர் தினசரி சிறப்பு ரயில் சேவை மே 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

சென்ட்ரல் முதல் மேட்டுப்பாளையம் தினசரி சிறப்பு ரயில் மே 17 முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே ஊரடங்கிற்கு ஒத்துழைத்து வருவது கண்முன்னே தெரிகிறது.மேலும் தெற்கு ரயில்வே சார்பில் மருத்துவத்திற்கு ரயில் பெட்டிகளும் ஒதுக்கி இருப்பதாகவும் சில தினங்கள் முன்பாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web