ரயில்களில் பெண்களுக்கு தனிப் பெட்டி – இலங்கை அரசு முடிவு!!

இந்தியாவில் ஒவ்வொரு ரயில்களிலும் பெண்களுக்கு என தனிப் பெட்டி ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கமாகும். தனியாக பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.
இந்தப் பெட்டியில் ஆண்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலான ஆண் குழந்தைகள் போன்றோர் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆண்கள் தவறி ஏறினால், ரயில்வே போலீசார் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதனால் பெண்கள் நீண்ட தூர பயணத்தின்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பயணிக்க முடியும்.
இந்தத் திட்டமானது பல காலமாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா, சீனா மற்றும் இன்ன பிற நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒவ்வொரு ரயில்களிலும் பெண்களுக்கு என தனிப் பெட்டி அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்தது, அதன்படி அதற்கான அரசாணையைப் பிறப்பித்தது.
இது மக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற திட்டமாக உள்ளது, இது விரைவில் அமலாகும் என்றும் கூறப்பட்டது.