தேர்தலில் வாக்களிக்க வசதியாக நாளை முதல் சிறப்பு பேருந்துகள்

 

தேர்தலில் வாக்களிக்க வசதியாக சொந்த ஊர் செல்லும் வகையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்து நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது 

bus

அரசு போக்குவரத்து கழகத்தின் செய்த சிறப்பு ஏற்பாட்டின்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. சுமார் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவலை https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த இணையதளத்தில் மூலமே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

From around the web